வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்திற்கு, வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் காற்று மெத்தை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
லண்டன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் நேற்று சுமார் ஒரு லட்சம் பெறுமதியான ஒன்பது காற்று மெத்தைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 13இற்கு மேற்பட்ட முள்ளந்தன்டு வடம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.