கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த விபச்சார நிலையம் பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது இதன்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபச்சார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்னவிற்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் தகவல் வழங்கப்பட்டது.
தகவலுக்கமைய, கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றொசான் ராயபக்சவின் பணிப்பில்; பெயரில், கிளிநொச்சி உதவிப் பொலிஸ் பரிசோதகர் தர்சனவினால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் குறித்த வீட்டை சோதனை இட விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதனையடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி குறித்த வீட்டில்; தேடுதல் நடாத்த அனுமதி வழங்கினார்.
இதன் பிரகாரம் குறித்த குழுவினர் பொலிசார் ஒருவரை சிவில் உடையில் அனுப்பி உறுதிப்படுத்தியதன் பின்னர், அவ்வீட்டை முற்றுகையிட்டு நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இவ் விபச்சார விடுதியானது கிளிநொச்சியில் பலமாத காலமாக இயங்கி வந்ததுடன், இதனை முடக்கும் முயற்சியில் கிளிநொச்சியில் உள்ள கல்வியலாளர்கள், பொது அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் என பலர் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.