அரச அலுவலகங்களில் தொடரும் நிதி மோசடி!கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர் சிக்கினார்

289 0
அரச அலுவலகங்களில் தொடரும் நிதி மோசடியின் வகையில் தற்போது கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஓர் பெண் கிராம சேவகர் ஒருவர் அலுவலகத்தின் போலிக் கடித தலைப்பினைப் பயன்படுத்தி வங்கியில் 18 லட்சம் ரூபா கடனாகப் பெற்றுள்ளார்.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஓர் பெண் கிராம சேவகர் ஒருவர் பிரதேச செயலகத்மின் கடிதத்லைப்பினை போலியாகத் தயார் செய்து அக்கடிதத்தினிலில் குறித்த பணியாளர் தொடர்பான உறுதிப்படுத்தல் கடிதம் போன்று தயார் செய்துள்ளார். அவ்வாறு தயார் செய்த கடிதங்களை இரு வங்கிகளில் வழங்கி கடனுக்கு விண்ணப்பித்துள்ளார். இதில் ஓர் வங்கியில்  15 லட்சம் ரூபாவும் மற்றைய வங்கியினில் 10 லட்சம் ரூபாவும் கோரப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த வங்கிகள் முறையே 11 லட்சம் ரூபாவும் , 7 லட்சம் ரூபாவும் கடனாக வழங்கியுள்ளனர். இவ்வாறு அண்மையில் கடனைப் பெற்ற பெண் கிராமசேவகர்  மகப்பேற்று காரணமாக விடுமுறையில் உள்ளார். குறித்த விடயம் தற்போது பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கிராம சேவகரும் தற்காலிக  பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதேவேளை குறித்த கடித்த் தலைப்புக்கள் மற்றும் றப்பர் முத்திரைகள் எவ்வாறு பெறப்பட்டன என்பது தொடர்பிலும் தீவிர விசாரணை இடம்பெறுகின்றது.
இதில் பிரதேச செயலகத்தின் வேறு பணியாளர்களும் தொடர்பு பட்டுள்ளனரா ? என்பது தொடர்பிலும் ஆராயப்படுகின்றது. அத்தோடு மேற்படி கடித்த்தலைப்பு மற்றும் றப்பர் முத்திரைகளை தயாரித்தவர்கள் என சகல வழிகளிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதேநோரம் குறித்த பெண் கிராம சேவகர் இவ்வாறு மோசடியில் இடம்பெறுவதும் இது முதலாவது தடவையல்ல எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதாவது குறித்த பெண் கிராமசேவகரின் முதலாவது பிரசவ காலத்தில் உடுவில் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய காலத்தில் இதை ஒத்த மோசடியில் ஈடுபட்டு தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார் . இதன் பின்னர் ஓர் அரசியல் கட்சியின் சிபார்சின் பெயரில் மீண்டும் பணி வழங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அதே மோசடியில் ஈடுபட்டுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதேநேரம் குறித்த பெண் கிராம சேவகரின் கணவர் ஓர் வேலையற்ற பட்டதாரி எனவும் கூறப்படுகின்றது.