மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பாதுகாவலராம் கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய நூற்றாண்டு பெருவிழாவின் இறுதி தினமான இன்று மட்டு.மறை மாவட்ட ஆயரினால் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதுடன் கொடியிறக்கமும் நடைபெற்றது.கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் நூற்றாண்டு திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றுவந்ததுடன் ஒன்பதாவது நவநாளினை சிறப்பிக்கும்வண்ணம் புனிதரின்; திருவுவப் பவணி வீதியுலா நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை நூற்றாண்டு பெருவிழா சிறப்புத் திருப்பலி இன்று காலை ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.இந்த திருப்பலியில் இலங்கை இயேசு சபை மாகாண தலைவர் அருட்தந்தை ஜெயராஜ் இராசையா மற்றம் அருட்தந்தை ரொசான் சுவைக்கின் ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
இந்த திருவின்போது நூற்றாண்டு பெருவிழா நினைவாக புனித இஞ்ஞாசியாரின் திருவுருவச் சிலையினை ஆயர் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.அத்துடன் பெருமளவான அடியார்கள் புடை சூழ கொடியிறக்கம் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வின்போது ஆலயத்தின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் உட்பட ஆலயத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றிய அருட்தந்தையர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் பங்குகொண்டனர்.