கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்த இந்தியத்துணைத்தூதுவர் ஐந்து பாடசாலைகளுக்குச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன் புத்தகங்களையும் வழங்கி வைத்துள்ளார்
கிளிநொச்சி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகளவான பாடசாலைகள் யுத்தின் பின்னர் பெரும் வளப்பற்றாக் குறைகளுடன் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் இன்று விஜயம் செய்த இந்தியத்துணைத்தூதுவர் நடராஜன் அவர்கள் புனித பெண்கள் திரேசா கல்லூரி, உருத்திரபுரம் மகாவித்தியாலயம் சிவபாதகலையகம் அன்னைசாரதா வித்தியாலயம் முரசுமோட்டை அந்தோனியார் வித்தியாலயம் ஆகிய ஐந்து பாடசாலைகளுக்கு விஜயம் செய்து நிலமைகளை பார்வையிட்;டு பாடசாலைச் சமுகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் குறித்த பாடசாலை நூலககங்களுக்கு ஒரு தொகை நூல்களையும் வழங்கி வைத்துள்ளார்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்விஜயம் தொடர்பில் கருத்துத் தொடர்பில் இந்தியத்துணைத்தூதுவர் அவர்கள் யத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை இந்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் யுத்தத்தின் பின்னர் இந்திய அரசின் நிதியுதவியுடன் 77 பாடசாலைகள் புனரமைக்கப் பட்டுள்ளன.
மேலும் 27 பாடசாலைகளைப் புனரமைப்பதற்கு 250 மில்லியன் ரூபாவினை வழங்கவுள்ளதாகவும் இதன் மூலம் இப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.