சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் சீர்திருத்தத்திற்கு அமைய அமைக்கப்பட்டுள்ள சகல ஆணைக்குழுகளின் பிரதானிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குகொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல்கள், காவல்துறை, அரசாங்க சேவைகள், இலஞ்ச மற்றும் ஊழல், கணக்காய்வு சேவை, மனித உரிமைகள் உள்ளிட்ட 10 ஆணைக்குழுக்கள் தற்போது இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.