வடமத்திய மாகாண சபையின் நீர்வழங்கல், காணி, கிராம அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார அமைச்சராக பதவி வகித்த எச்.பீ சேமசிங்க அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மாகாண சபை உறுப்பினர் சரத் இளங்கசிங்க இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, இன்று முற்பகல் மாகாண ஆளுநர் பீ.பி திஸாநாயக்க முன்னிலையில், அவர் அந்த அமைச்சு பதவிக்காக சந்தியபிரமாணத்தை செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதான பதவியேற்கவுள்ள அமைச்சரும் கடந்த தினம் வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சத்திய கடதாசியில் கைச்சாத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.