புத்தளம் – சின்னப்பாடு பிரதேசத்தில் 1 கிலோ 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடற்றொழிலில் ஈடுபடும் ஒருவரின் வீட்டிலிருந்து ப்ரவுன் சுகர் ரக ஹெரோயின் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளைஇ கைதுசெய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.