கொழும்பில் நீர்விநியோக தடை

277 0

வத்தளை மற்றும் களனி பிரதேசங்களில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு புணரமைப்பு பணிகள் காரணமாக நாளைய தினம் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 9 மணிவரை இந்த நீர்விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய களனி, பெஹலியகொடை, வத்தளை நகரசபை அதிகார பிரதேசங்கள் மற்றும் ஹெந்தளை பகுதியிலும் இந்த 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.