ஆசிய, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் ‘வன் பெல்ட் வன் ரோட்’ எனப்படும் பொருளாதார நெடுஞ்சாலை திட்டத்துக்கு இலங்கை தனது முழு ஆதரவை வழங்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவில் தெரிவித்துள்ளார்.
பீஜிங் நகரில் இடம்பெற்ற வட்ட மேசை கலந்துரையாடலின் போது அந்நாட்டு தலைவர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், நூற்றாண்டுகளில் முதன் முறையாக உலகலாவிய பொருளாதார அதிகாரம் ஆசியாவை நோக்கி நகருகின்றது.
2030 ஆம் ஆண்டளவில் ஆசியா உள்நாட்டு உற்பத்தியிலும் தொழினுட்பத்தில் முலீடுகளை செய்வதிலும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விஞ்சிவிடும் என்றார்.