ஊர்காவற்துறை பருத்தியடைப்பு பகுதியில் யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியள் வள திணைக்கள அதிகாரிகளினால் அநாதரவான நிலையில் காணப்பட்ட 7 தொகுதிக்கும் மேற்பட்ட தங்கூசிவலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று காலை திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த தடைசெய்யப்பட்ட சட்டவிரோத தங்கூசி வலை தொகுதி கைப்பற்றப்பட்டதோடு கைப்பற்றப்பட்ட வலைகள் ஊர்காவற்துறை நீதிவானிடம் முற்படுத்தப்பட்டு கைப்பற்றப்பட்ட வலைகளை அழிக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் றியால் உத்தரவிட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட வலைகளின் பெறுமதி சுமார் 1 மில்லியன் என திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2010 ம் ஆண்டுக்கு பின்னர் வடக்கில் தங்கூசி வலை பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதோடு தங்கூசி வலையுடன் கைது செய்யப்படுவோர் மீது நீரியல் வள திணைக்களத்தினால் சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.