கோட்டாவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்

559 0

Gotabaya-Rajapaksaநிறைவேற்று ஜனாதிபதி முறை தொடரும்பட்சத்தில், அடுத்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவே, கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம், கடந்த ஒருவருடத்துக்குள் நாட்டில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.
இதன்காரணமாக நாட்டுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில் கூட்டு எதிர்க்கட்சி, அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் என்று மகிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.