சிறப்பாக இடம்பெற்ற 2017 ம் ஆண்டுக்கான ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழா

295 0
ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழா  யாழ்.ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு. A. அசோக் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. கே.என். விந்தன் கனகரத்தினம் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக ஊர்காவற்றுறை தீவகம் வடக்கு பிரதேச செயலர் திருமதி அன்ரன் யோகநாயகம், யாழ். ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்பணி K.ஜேம்ஸ் சிங்கராஜர், யாழ்ப்பாணம் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் திரு. ஐ. தவேந்திரன், யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி வினோதினி ஸ்ரீமேனன்,  யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு. R. காமராஜ், தேசிய சேவைகள் துறை தேசிய இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் திரு. S. விஜிதரன், தீவக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. E. G. லக்ஸ்மன் ஆகியோரும், கௌரவ விருந்தினராக கிருபா சாரதி பயிற்சிப் பாடசாலை உரிமையாளர் திரு. A. கிருபாகரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இளைஞர் கழகங்களுக்கு இடையேயான இவ் விளையாட்டுக்களில் உதைப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் ஞானஒளி இளைஞர் கழகத்தை எதிர் இருதயராஜா இளைஞர் கழகமும், ஆண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் வளாகம் இளைஞர் கழகம் எதிர் தம்பாட்டி காந்திஜீ கழகமும், கயிறு இழுத்தல்  பெண்களுக்கான போட்டியில் வளாகம் இளைஞர் கழகம் எதிர் சென்.தோமஸ் இளைஞர் கழகமும் பங்குபற்றினர்.
இந் நிகழ்விற்கு பரிசுப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் கழகத்திற்கு தனது சொந்த நிதியிலிருந்து வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ரூபா பத்தாயிரம் (10000.00) அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.