டெங்கு ஒழிப்பு – அரச மற்றும் தனியார் பிரிவினர் ஒன்றிணைந்த தேசிய வேலைத்திட்டம்

277 0

டெங்கு ஒழிப்புக்காக அரச மற்றும் தனியார் பிரிவினர் ஒன்றிணைந்த தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய அன்றைய தினம் முதல் மூன்று மாத காலப்பகுதிக்கு டெங்கு ஒழிப்பு காலத்தை பிரகடனப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு செயலணியினருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு ஒழிப்புக்காக அரச துறையினர் நிறுவன ரீதியாக மேற்கொள்ள வேண்டிய தொழிற்பாடுகள் தொடர்பிலான புதிய சுற்றறிக்கைகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்புக்காக தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து எழுத்து மூலம் அறிக்கை சமர்பிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.