அமைச்சராக சுசில் குணரத்ன சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்!

330 0

வட மத்திய மாகாணத்தின் போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக சுசில் குணரத்ன சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதுவரை குறித்த பதவியில் இருந்து வந்த எஸ்.எம்.ரஞ்சித் அண்மையில் இராஜினாமா செய்ததை அடுத்து, அவர் இப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வட மத்திய மாகாண சபையின் சுகாதார அமைச்சராக இருந்த கே.எச்.நந்தசேனவை பதவி நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஞ்சித் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.