யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினிப் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு (காணொளி)

279 0

 

யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினிப் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மாவிலித்துறையில் அமைந்துள்ள குமுதினிப் படுகொலை நினைவாலயத்தில் நடைபெற்றது.

1985 ஆம் 5 ஆம் மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவில் இருந்து வழமை போன்று புறப்பட்ட குமுதினிப்படகில் பயணிகள், நடுக்கடலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 32 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடக்கு மாகான சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், கஜதீபன் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பசுந்தீவு ருத்திரனின் நீலக்கடலலையின் நிணைவுகள் பாகம் ஒன்று நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

நூலின் முதல் பிரதியினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெளியிட்டு வைக்க, நெடுந்தீவு பாடசாலைகளின் கனடா ஒன்றித்தின் தலைவர் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் பொது மக்கள், மத குருக்கள், அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.