நெல்லியடியில் சிறப்பாக இடம்பெற்ற நலமுடன் வாழ்வோம் நூல் வெளியீட்டு விழா

395 0
வைத்திய கலாநிதி வே. கமலநாதன் எழுதிய நலமுடன் வாழ்வோம் என்ற மருத்துவம் சார்ந்த கட்டுரைத்தொகுதி நூலின் வெளியீட்டு விழா  நெல்லியடி மத்திய கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் க.அருள்மொழி பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
வரவேற்புரையை பருத்தித்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் மா.நவநீதமணி ஆற்றினார். வாழ்த்துரைகளை கரவெட்டி சுகாதார வைத்தியஅதிகாரி டாக்டர் சி.சுதோகுமார், நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் க.கிருஸ்ணகுமார், பிரதேச செயலர் ச.சிவசிறி, கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன், யாழ். பல்கலைக்கழக கல்வியியற்றுறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணி, வடமாகாண மீன்பிடி, போக்குவரத்துத் துறை அமைச்சுச் செயலாளர் சி.சத்தியசீலன், ஆகியோர் ஆற்றினர்.
.நூலின் வெளியீட்டுரையை யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் ஆற்றினார். நயப்புரையை வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன் ஆற்றினார். நன்றியுரையை நூலாசிரியரின் புதல்வியும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவியுமாகிய கமலநாதன் லக்சனா நல்கினார்.
.நூலின் முதற்பிரதியை நெல்லியடி செல்லமுத்தூஸ் ரெக்ஸ்ரைல்ஸ் உரிமையாளர் ச.பிறேம்குமாரும் மருதம் பெயின்ற் நிறுவன உரிமையாளர் சி.தயாபரனின் சார்பில் அவரது புதல்வரும் பெற்றுக்கொண்டனர்.
.வைத்திய கலாநிதி வே.கமலநாதன், வரணி அரச வைத்தியசாலையின் பிரதம வைத்தியராகத் தற்போது கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கல்வித்துறை, மருத்துவத்துறை சார்ந்து அதிக எண்ணிக்கையானோர் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.