ஒரே பாதை ஒரே இலக்கு என்ற தொனிபொருளில் இடம்பெறும் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீன சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின்னை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது பல்வேறு துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய மாநாட்டில் நூற்றுக்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகளும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி, சிறந்த வெற்றியை நோக்கியதான பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.