நாடாளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியற்றதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் கீதா குமாரசிங்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செயயப்பட்ட மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணையை முதல் தடவையாக உயர் நீதிமன்றம் விசாரித்தபோது மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கீதா குமாரசிங்க இரட்டை பிரஜாவுரிமை பெற்றுள்ளதாக அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.