இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்துவதை குறைத்துவிட்டு, அரசியலில் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ், போலந்து நாட்டுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான இன்று,போலந்தின் கிராகோ நகரில் போப் பிரான்சிஸ் பங்குபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவுக்கு வருகை தந்த போப் பிரான்சிஸ், அங்கிருந்த திறந்த வெளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குழுமியிருந்தனர்.”சமூக வளைதளங்கள், வீடியோ கேம்கள், கணினி, ஸ்மார்ட் போன் போன்றவற்றுடன் இளைஞர்கள் குறைந்த நேரம் மட்டுமே செலவிட வேண்டும். சமூக சேவை மற்றும் அரசியலில் அதிக நேரம் செலவிட வேண்டும். இந்த உலகத்தில் உங்கள் அடையாளங்களை விட்டு செல்லுங்கள்” என அங்கிருந்த இளைஞர்களை போப் வலியுறுத்தினார்.