சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஒரே கரையோரம் – ஓரே பாதை என்ற மாநாடு

307 0

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஒரே கரையோரம் – ஓரே பாதை என்ற மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. 65 நாடுகள் பங்குபற்றும் இந்த மாநாடு இருநாட்கள் இடம்பெறவுள்ளது.

இதில், சுமார் 20 அரச தலைவர்கள் கலந்து கொள்வதோடு, இந்தியா இதன்பொருட்டு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை சார்பில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவொன்று பீஜீங் சென்றுள்ளது.

இவர்களை பீஜிங் நகரின் அரசியல் ஆலோசகர் சம்மேளனத்தின் நிரந்த குழுவின் உபதலைவர் லீ ஜேங்யு இலங்கைக்கான சீனத்தூதுவர் ஈ மியங் லியாங் மற்றும் அவரது பாரியார், சீனாவிலுள்ள இலங்கைக்கான தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு தலைமையிலான தூதரக அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.