டெங்கு தொற்றால் பாரிய அழிவு நிலை

260 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிகளை டெங்கு ஒழிக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்த வில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் காரணமாக நாட்டில் டெங்கு தொற்றால் பாரிய அழிவு நிலை தோற்றியுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சபையின் ஒழுங்கு முறைக்கு மாறாக செயற்படும் சைட்டம் நிறுவனத்தை காப்பாற்ற சுகாதார அமைச்சர் முயற்சிக்கும் செயல் கவலையளிப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44 ஆயிரத்து 623 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இவற்றுள் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் இனங்கானப்பட்டுள்ளதுடன், அது நூற்றுக்கு 41 தசம் 48 வீதமாக உள்ளது.

இதனிடையே அதிகமான டெங்கு நோயாளர்கள் மார்ச் மாதமளவிலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மார்ச் மாதத்தில் மாத்திரம் 13 ஆயிரத்து 420 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.