யாழில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்

290 0
26 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராட்டத்தின்போது இரு கண்ணையும் இழந்த தாவடியைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர் கண்ணில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக  உயிரிழந்தார்.
தியாகலிங்கம் – குமாரதாஸ் என்னும் 46 வயதினையுடைய முன்னாள் போராளியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தார்.
குறித்த போராளியின் மரணம் தொடர்பில்  தெரிய வருவது ,
யாழ்ப்பாணம் தாவடியில் 1972ம் ஆண்டில் பிறந்து கல்வி கற்றவேளையில் 2ம் கட்ட ஈழப்போர் 1990ம் ஆண்டு 6ம் மாதம் ஆரம்பித்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த்து கொண்டார். இவ்வாறு இணைந்தவர் மணலாறு மாவட்டப்படையடியில் செயல்ப்பட்ட காலத்தில் 1991ம் ஆண்டு ஆணையிறவு யுத்தம் முடிவுற்ற நிலையில் மணலாறுப் பகுதியில. இராணுவம் ஆரம்பித்த வன்வளைப்பு முறியடிப்புச் சமரில் பங்கு கொண்டிருந்த நிலையில் இரு கண்களிலும் காயமடைந்தார்.
இக் காயத்தின் காரணமாக சிறிது காலத்தில் இரு கண்களுமே அகற்றப்பட்டது. இதன் பின்னர் விடுதலைப் புலிகளினால் நவம் அறிவுக் கூடத்தினில் பராமரிக்கப்பட்டுவந்த போராளியை சக போராளி ஒருவர் அன்பு கொண்டு இல்லற வாழ்வில் இணைந்திருந்த நிலையிலும் 2009 மே மாதம் வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நன்கு பராமரிக்கப்பட்டும் மருத்துவ வசதிகள் மேற்கொண்டும் வந்திருந்தனர்.
இந்த நிலையில் யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் குறித்த போராளி மனைவி பிள்ளைகளுடன் கிளிநொச்சியில் வசித்து வந்த நிலையில் பல தடவை குறித்த போராளி கண் இல்லாத காரணத்தினால் அதன் நரம்புத் தாக்கத்திற்கு இலக்கான நிலையில் வைத்தியத்திற்காக மனைவி அதிக சிரமத்ரின் மத்தியிலேயே மேற்கொண்டுவந்தபோதும் தன்னால் முடிந்தவரை மேற்கொண்டிருந்தார்.
குறித்த போராளியின் நோய் காரணமாக இந்தியாவில் உள்ள வாசன் ஐ பெயர் போன்ற மிகப்பெரும் வைத்தியசாலைகளாலேயே போதிய வைத்திய வசதியினை வழங்க முடிந்தபோதும் அதற்கான நிதி வளம் அற்ற குடும்பமாக வீட்டுடன் இணைந்த சிறு வர்த்தக நிலையம் ஒன்றினை நடாத்தியே தமது பொருளாதாரத்தினை நடாத்திய குடும்பத்தினால் வாசன் ஐ கெயார் வைத்தியசாலையை விளம்பரப் படங்களில் மட்டுமே பார்க்க முடிந்ததே அன்றி நேரில் சென்று வைத்தியம் புரிய முடியவில்லை.
இதனால் குறித்த போராளியின் கண் நரம்புகள் மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாகி குறித்த போராளி அதிக உபாதைக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.