சர்வதேச ரீதியில் பாரியதொரு இணைய தாக்குதல்

267 0

சர்வதேச ரீதியில் பாரியதொரு இணைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா மற்றும் ஸ்பெய்ன், உள்ளிட்ட 99 நாடுகளின் இணைய சேவைகள் மீது இந்த தாக்குதல் நடந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

பிரிட்டனின் தேசிய மருத்துவ சேவையின் இணைய கட்டமைப்பின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்துள்ளது.

இதன் காரணமாக நோயாளிகளுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கப்பம் கோரும் மென்பொருளை பயன்படுத்தி சுமார் 70 ஆயிரம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய சேவைகளை மீண்டும் செயற்பட செய்யவேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று கேட்பதே பிணைத் தொகை மென்பொருள் தாக்குதலாகும்.

இந்தத் தாக்குதல் குறித்து சர்வதேச ரீதியில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.