எனினும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும் என்று நம்பவில்லை – நாமல்

283 0

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைக்கப்பெறும் விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்போம் என தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதியின் படி, அதனை இன்னும் இரண்டு வாரங்களில்

பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டார்.

எனினும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும் என்று நம்பவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இவ்வாறு கிடைக்கும் என்றால் எவ்வாறான நிபந்தனைகளில் அடிப்படையில் கிடைக்கும் என்று வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.