மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா – மு.க.ஸ்டாலின்

357 0

201608010928476390_other-party-members-join-DMK-MK-Stalin-today-visit-to_SECVPFஈரோடு கொங்கு கலையரங்கில் நடக்கும் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழாவில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் கோவை வருகிறார்.

தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

பின்னர் அவர் கார் மூலம் புறப்பட்டு ஈரோடு செல்கிறார். இரவு 7 மணிக்கு ஈரோடு கொங்கு கலையரங்கில் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இரவில் ஈரோட்டில் தங்குகிறார்.

நாளை(செவ்வாய்க்கிழமை) தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி காலை 8 மணிக்கு ஈரோடு அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அதன்பின்னர் கார் மூலம் கோவை திரும்புகிறார்.

பிற்பகல் 3 மணிக்கு பீளமேடு கோல்டுவின்ஸ் ஏ.பி. திருமண மண்டபத்தில் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். மாலை 4.45 மணிக்கு விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.