ஐஸ்ஐஎஸூக்கு எதிராக கத்தோலிக்க ஆராதணையில் முஸ்லிம்கள்

383 0

isis-brothersகடந்த செவ்வாய்க்கிழமையன்று பிரான்ஸில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நடத்தப்பட்ட கத்தோலிக்க ஆராதணையில் தமது ஒத்துழைப்பை காட்டும் வகையில் முஸ்லிம்களும் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐஸ்ஐஎஸ் தீவிரவாதிகளினால் ருயின் பகுதியில் உள்ள தேவாலயத்தின் பாதிரியார் கொலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் இதனை கண்டிக்கவும் பிரான்ஸின் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவை வழங்கும் வகையிலும் பாதிரியாருக்கான கத்தோலிக்க ஆராதனையில் பங்கேற்கவேண்டும் என்று பிரான்ஸின் முஸ்லிம் பேரவை கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களும் ஆராதணைகளில் பங்கேற்றனர்.