காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் சீனா தலையிடுவதே சிறந்த சாத்தியமான தீர்வை தரும் என பாகிஸ்தான் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இன்று சீன பிரதமர் லீ கேகுயாங்-கை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய நவாஸ் ஷெரீப் ,” காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரையில் சீன அரசு பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்து வருகின்றது. இனி வரும் காலங்களிலும் அது தொடரும் என எதிர் பார்க்கிறேன். இவ்விவகாரத்தை பொறுத்தவரையில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் சீனா தலையிடுவது சிறந்த சாத்தியமான தீர்வை தரும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா-பாகிஸ்தான் இணைந்து சாலை அமைக்கும் நடவடிக்கைக்கு சமீபத்தில் இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தை நவாஸ் ஷெரீப் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.