பேரூந்து கட்டண சீர்திருத்தம் இன்று முதல்

620 0

bus-private-450x320தேசிய போக்குவரத்து சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய போக்குவரத்து கட்டண சீர்த்திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.
இதன்படி, அரச மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணங்கள் இன்று முதல் 6 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரைக்காலமும் 8 ரூபாவாக இருந்த குறைந்த பேருந்து கட்டணம், 9 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் 12 ரூபாவாக இருந்த பேருந்த கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.
15 ரூபாவாக இருந்த பேருந்த கட்டணம் 16 ரூபாவாகவும், 18 ரூபாவாக இருந்த கட்டணம் 20 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து கட்டணத்திலும் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிவேன நெடுச்சாலை போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களும் கிலோ மீட்டருக்கு 5 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.