தமிழின அழிப்புக்கு நீதி கோரி 3 வது நாளாக முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி பயணம் Stuttgart நகரை வந்தடைந்தது.

427 0

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 3 வது நாளாக முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி பயணத்தில் இன்று மதியம் Stuttgart நகர மத்தியில் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி பதாதைகள் அமைக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. அதிகளவு நடமாடும் பகுதியில் வைக்கப்பட்ட இனவழிப்பை எடுத்துரைக்கும் பதாதைகளை வேற்றின மக்கள் மிகவும் கவனித்ததை தொடர்ந்து துண்டுப்பிரசுரங்களையும் வாங்கிச் சென்றனர்.

அத்தோடு இன்றைய தினத்தில் Stuttgart நகரில் உள்ள Die Linke , SPD ,CDU , Bündnis 90 / Die Grünen , அரசியல் கட்சிகளுக்கும், Amnesty Internatinal ,UNICEF , அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் மற்றும் மாநில உள்நாட்டு அமைச்சுக்கும், Stuttgart நகரபிதாவுக்கும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் மனு கையளிக்கப்பட்டு , ஈழத்தமிழர்களின் நிலைமையை அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 3 வது நாளாக முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்தி பயணம் இன்று மாலை 6 மணிக்கு Karlstruhe நகரத்துக்கு வந்தடைந்து கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.