எதிர்காலத்தில் இலங்கையின் அபிவிருத்தியில் பங்காளராக இந்தியா தயார்

268 0

எதிர்காலத்தில் இலங்கையில் பலமிக்க பொருளாதாரத்தை உருவாக்கி கொடுப்பதற்கு மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கையில் அபிவிருத்திப் பங்காளராவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செயற்பட்டுக் கொண்டிருப்பதாக இந்து சமுத்திர வலயத்தின் கூட்டு செயலாளர் கூறியுள்ளார்.

அதேவேளை இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கும் என்று உறுதியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்இ விஜயம் தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

புரிந்துணர்வு உடன்படிக்கைகள் போன்றே ஒப்பந்தங்கள் என்று பல வகை இருக்கின்றன. எனினும் கையொப்பமிடுவதற்கான​ எவ்வித ஒப்பந்தங்களும் இன்று எம்மிடமில்லை. இன்று இலங்கையின் தலைமையுடன் இலங்கையின் நாளைய தினத்தை நோக்கி நாம் இருப்போம். இலங்கையின் நாளைய தினத்திற்காக நாம் உதவிகளை வழங்குவோம்.

எதிர்காலத்தில் தொடர்ச்சியான உதவிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். நாம் அடுத்துவரும் சில நாட்களுக்குள் இலங்கையில் பலமிக்க அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக பங்காளராகுவோம் என்பதை உறுதியளிக்கின்றோம்.

அத்துடன் இலங்கையில் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் செழிப்பு மற்றும் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வது போன்றே இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை அவர்களின் இந்த விஜயத்தின் போது நாட்டின் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்ய எதிர்பார்துள்ளதாகவும், இந்த சந்தர்ப்பங்களில் இடம்பெறுகின்ற சந்திப்புக்களின் போது, புத்த மதம், சுற்றுலா, பௌத்த கலாச்சார மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற உறவை மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாக அவதானம் செலுத்த உள்ளதாக இந்து சமுத்திர வலயத்தின் கூட்டு செயலாளர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவுடனான சந்திப்பு குறித்து இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர், அது மிகவும் நட்பு ரீதியான சந்திப்பு என்றும், இந்திய இலங்கைக்கிடையில் காணப்படுகின்ற உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கு மற்றும் அபிவருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் சந்தோஷப்படக் கூடிய கலந்துரையாடல் என்று கூறினார்.