காங்கேசன்துறை கடலில் மிதந்த 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

232 0

காங்கேசன்துறை கடற்படை தலைமைப்பீடத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்தவாறு இருந்த 9.3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்துவந்த பொதி ஒன்றினை கைப்பற்றியிருந்தனர். அதனை பிரித்து சோதனையிட்ட போது ஹெரோயின் போதைப்பொருள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த ஹெரோயினை கடற்படைதளத்திற்கு கொண்டு வந்து மேலதிக பரசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது 100 வீதம் ஹெரோயின் என கண்டறியப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இலங்கை மதிப்பீட்டில் சுமார் 9 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயின் வடக்கு கடற்பரப்பு ஊடாக கொழும்பிற்கு எடுத்து செல்வதற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடற்படையினரை கண்டதும் கடலில் வீசிவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.