நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைதீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 65ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.