நாட்டின் கல்வி திட்டத்திற்கும் பொருளாதார திட்டத்திற்கும் இடையில் இணைப்பு இல்லை என்பதையே இன்றைய பட்டதாரிகளின் போராட்டம் காட்டுவதாக கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் சி.மௌனகுரு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தில் உள்ள நுண்கலை பட்டதாரிகள் பேராசிரியை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது கருத்து தெரிவித்த பேராசிரியர் சி.மௌனகுரு, வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் மிக முக்கிய போராட்டமாக வெளிக்கிளம்பியுள்ளது.
இலங்கையில் உள்ள பல்வேறு முக்கிய பிரச்சினைகளுள் ஒன்றாக பட்டதாரிகளின் பிரச்சினையும் வெளிக்கிளம்பியுள்ளது.
இந்த போராட்டம் எமது கல்வித் திட்டத்திற்கும் எமது பொருளாதார திட்டத்திற்கும் இடையில் ஒரு இணைப்பு இல்லை என்பதையே காட்டுகின்றது.
என மேலும் குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக நுண்கலைதுறை தொடர்பில் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில், அது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிசாந்த், உப தலைவர் சி.சிவகாந்தன் உட்பட நுண்கலைதுறை பட்டதாரிகளும் கலந்துகொண்டனர்.