மோடிக்கான ஜனாதிபதியின் விருந்தில் சம்பந்தன்,விக்கினேஸ்வரன் பங்கேற்பு

260 0

ஐக்­கிய நாடுகள் சர்­வ­தேச வெசாக் தினத்தை ஆரம்­பித்து வைப்­ப­தற்­காக இன்று மாலை இலங்­கைக்கு வரு­கை­தரும் இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடிக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று இரவு விருந்­து­ப­சா­ர­மொன்றை அளிக்­க­வுள்ளார்.

ஜனா­தி­பதி மாளி­கையில் நடை­பெறும் இந்த இர­வு­விருந்­து­ப­சா­ர­மா­னது இரவு 8.30 மணியளவில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்த விருந்­து­ப­சா­ரத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்­கையின் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன்,  அமைச்­சர்கள், மாகாண முத­ல­மைச்­சர்கள் ஆகி­யோ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.  இந்த விருந்துபசாரத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்­கைக்­கான இந்­திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்­ளிட்ட முக்­கிய அதி­கா­ரி­களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த விருந்­து­ப­சா­ரத்தில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர்கள் பங்­கேற்க மட்­டார்கள் என அறி­விப்­பட்­டுள்­ளது. நாளைய தினம் மலை­ய­கத்­திற்­கான வர­லாற்று விஜ­யத்தை இந்­தியப் பிர­தமர் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்­கு­ரிய ஏற்­பா­டு­களை கவ­னித்­துக்­கொள்­வ­தற்­காக அட்­டனில் அவர்கள் முகா­மிட்­டி­ருப்­பதால் அக்­கு­ழு­வினர் இதில் பங்­கேற்­ற­மாட்­டார்கள் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை நாளை­ய­தினம் அட்டன் செல்லும் இந்­தி­யப்­பி­ர­தமர் மோடி அங்கு அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யி­ன­ரையும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸையும் தனித்­த­னி­யாக டிக்­கோ­யாவில் சந்­திக்­க­வுள்ளார்.

அந்­நி­கழ்­வு­களை பூர்த்தி செய்த பின்னர் மீண்டும் கொழும்பு திரும்பும் இந்தியப்­பி­ர­தமர் நரேந்­திர மோடியை எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான குழு­வினரை கட்­டு­ந­யாக்க விமான நிலை­யத்தில் விசேட பிர­மு­கர்­க­ளுக்­கான கேட்போர் கூடத்தில் மாலை 5 மணி­ய­ளவில் சந்திக்க­வுள்­ளனர்.

இக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நான்கு கட்சிகளின் தலைவர்களான மாவை.சோதிராஜா, சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்ந்திரன். செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.