பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுநாள் சனிக்கிழமை சீனாவிற்கு செல்கின்றார். சீனாவிற்கான பிரதமரின் விஜயத்துடன் ஆசிய பசுபிக் வலய நாடுகளுடனான இலங்கையின் பொருளாதார உறவுகள் முழுமையடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் துறைமுக நகர்த் திட்டம் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என சீனா தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த திட்டம் முழுமையடையும். துறைமுக நகர்த் திட்டத்தின் ஊடாக 80,000 தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும்.
சுற்றுலாப் பயணிகள், நிதி நிறுவனங்கள், அனைத்துலக நிறுவனங்களை நாட்டுக்குள் உள்ளீர்ப்பதற்கு இந்த துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டம் வழியமைக்கும் என சீனா சுட்டிக்காட்டியுள்ளதுடன் இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக நகராக இந்த துறைமுக அபிவிருத்தி நகர் உருவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.