கிழக்கு முதலமைச்சரின் வீதிக்கு ஔி நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டமாக ஏறாவூரின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் தெருவோர மின் விளக்குகளை பொருத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன மத வேறுபாடின்றி சகல பிரதேசங்களிலும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் வீதிக்கு ஔி நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஏறாவூர் நகரை அபிவிருத்திக் காணச் செய்யவதற்கு மக்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு கிராமங்களையும் மையப்படுத்தி கிழக்கு முதலமைச்சரினால் அபிவிருத்திக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கலைமகள் பாடசாலை வீதி,தைக்கா குறுக்கு வீதி ஆலையடி வீதி,ரிபாய் வீதி ,சர்வோதய வீதி ,காளி கோயில் வீதி,லக்கி வீதி மற்றும் காந்தி வீதி ஆகிய பகுதிகளில் 120 மின்கம்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் தற்போது இடமபெற்று வருகின்றன,
இது தொடர்பான பணிகளை நேரடியாக கண்காணிக்கச் சென்ற முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறித்த பகுதிகளில் உள்ள மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்து கொண்டார்,
சில பிரச்சினைகளுக்கு உடனடியாக தொலை பேசி மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வுகளையும் வழங்க முன்வந்தமை மக்களிடம் பாராட்டையும் பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.,
முதலமைச்சரினால் உருவாக்கப்பட்டுள்ள அபிவிருததிக் குழுக்களினால் இந்தத் திட்டங்கள் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படுவதுடன் மக்களின் ஏனைய பிரச்சினைகளை மையப்படுத்திய தீர்வு வழங்கும் திட்டங்கள் விரைவில் முன்னெடு்க்கப்பட்டுள்ளன.