கிளிநொச்சி ஜெயந்திநகர் சி.க.கூ. சங்கத்தின் ஏழாவது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று கிளி. இந்து ஆரம்ப வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
2010 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்ட மேற்படி சங்கம் ஏழு ஆண்டுகளாக 150 இற்கு மேற்பட்ட அங்கத்தவர்களுடன் சிறந்த முறையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. சங்கத்தின் ஏழாவது ஆண்டு நிறைவின் போது சிறந்த சேமி;ப்பாளர்களுக்கு பரிசில்கள் வழங்க்பட்டதோடு, சிறுவர்களுக்கும் அவர்களது சேமிப்பை ஊக்குவிக்கும் முகமாக பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. இதற்கான கற்றல் உபகரண தொகுதிகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமை;பாளருமான மு. சந்திரகுமார் வழங்கயிருந்தார்
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த அவர்
யுத்த காலத்தில் கூட்டுறவு அமைப்பே மக்களுக்கு அளப்பரிய பணியாற்றியது. உணவுத் தேவை உள்ளிட்ட பலவேறு பணிகளை தமிழ் மக்களுக்கு வழங்கிய பெருமை வன்னியிலுள்ள கூட்டுறவையே சாரும். ஆனால் யுத்தத்திற்கு பின்னர் கூட்டுறவின் நிலைம கவலைகுரியதாக உள்ளது.
மீள்குடியேற்ற காலத்தில் அரசின் பல்வேறு நிதியுதவித் திட்டங்களை கூட்டுறவுக்கு நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். இதில் சில வினைத்திறன் உள்ள கூட்டுறவு அமைப்புக்கள் சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்க பல எம் கண் முன்னே வீழ்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. கூட்டுறவுத் துறையை கண்காணிக்க வேண்டிய சரியாக வழிநடத்த வேண்டிய அரச இயந்திரமும் சரியான முறையில் செயற்படாமையே பல கூட்டுறவு அமைப்புக்கள் செயலிழந்து போகின்றமைக்கு காரணமாக இருக்கிறது.
ஆனால் கூட்டுறவு அமைப்புக்கள் கப்பம் செலுத்துவது போன்று பணம் கூட்டுறவுத் திணை;ககளத்திற்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருந்து கூட்டுறவு அமைப்புகளுக்கு எவ்வித சேவைகளும் கிடைப்பதில்லை. எனத்தெரிவித்த சந்திரகுமார்.
அந்த வகையில் ஜெயந்திநகர் வடக்கு சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கம் 150 அங்கத்தவர்களுடன் சிறப்பாக செயற்பட்டு வருகிறது.எனவே தொடர்ந்தும் சிறப்பாக செயற்படுவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கி;றேன் எனவும் தெரிவித்தார்
சங்கத்தின் உப தலைவர் புவனேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் கேதீஸ்வரன், அருட்தந்தை யூட் அமலதாஸ், இந்து ஆரம்ப வித்தியாலய அதிபர் கணேசமூர்த்தி, ஊற்றுப்புலம் பாடசாலை அதிபர் உமாசங்கர், கூட்டுறவு அபிவிருத்தி அலுவலர் சஞ்சீவ்,கிராம அலுவலர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தேவன் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்கொண்டனர்.