சிரிய அகதி ஒருவருக்கு ஒஸ்ட்ரியாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அவர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டமை உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
27 வயதான அவர், சிரியாவின் ஹோம்ஸ் நகரில் ஆயுதமற்ற, காயமடைந்த இராணுவத்தினர் 20 பேரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜுன் மாதம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
தம்மீதான குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்து வந்த போதும், குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.