ஏமனில் கொலரா நோயின் தாக்கம் அதிகரிப்பு

244 0

ஏமனில் கடந்த இரண்டு வாரங்களாக கொலரா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி தொடக்கம் மே 7ஆம் திகதி வரை ஏமனின் 9 மாகாணங்களில் 2 ஆயிரத்து 22 பேர் கொலரா நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல்கள் இடம்பெற்று வருவதால் பெருமளவிலான வைத்தியசாலைகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், பல்லாயிரம் கணக்கானவர்கள் கொலராவினால் பாதிக்கப்பட்டு இக்கட்டான நிலையில் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.