போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் மினுவாங்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ஒருதொகை போதைபொருட்களும் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் வீடுடைப்பு உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என தெரியவந்துள்ளதாக காவல்துறையில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மினுவாங்கொட நீதிவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளனர்.