வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அடிப்படையிலேயே அரசியல் தீர்வு – விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – மாவை

354 0

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அடிப்படையிலேயே அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பொதுசெயலாளரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி காலத்தில், 1995ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் பிராந்திய ரீதியான முறைமை அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து அறிமுகப்படுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதுடன், கிழக்கில் முஸ்லிம்களுக்கு நிர்வாக கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்தும் இந்த திட்டம் சிறந்த அரசியல் தீர்வாக பார்க்கப்படுகிறது.

இதனை எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்துவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்ந்து வருகிறது.

வடக்கு கிழக்கு மீளிணைப்பின் ஊடாகவே அரசியல் தீர்வுக்கு சாத்தியம் என்பதையே தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பி இருக்கிறது என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.