பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாகப்பூரணை தினத்தை முன்னிட்டு நேற்று இரவு ஒளிபரப்பான விசேட நேரடி தொலைக்காட்சி நிகழ்யொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இவை போலியானக் குற்றச்சாட்டுகள்.
இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலான எந்த திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதை தாம் உறுதியுடன் தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.