முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு பிரதேச செயலாளரால்; ஊடகவியலாளர் ஒருவருக்கு தொலைபேசியூடாக தகாத வார்த்தைப்பிரயோகம் மேற்கொண்டமைமற்றும் அச்சுறுத்தல் விடுத்த அரச உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட நான்கு பேருக்கு எதிராக கிளிநொச்சிப்பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் இடம்பெற்று வரும் சட்டவிரோதமாக மரங்கள் கடத்தப்படுதல் மணல் அகழ்வுகள் தொடர்பாக அது சார்ந்த விடயம் தொடர்பாக குறித்த பிரதேச செயலாளரிடம் தொலைபேசியுடாக ஊடகவியலாளர் ஒருவர் தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பாக வினவியதைத் தொடர்ந்து உனது மனைவியை நான் கெடுத்து விட்டேன் என நான் எழுதி தந்தால் செய்தி போடுவாயா? எனக்கேட்டுவிட்டு தகாத வார்த்தைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதே வேளை அதே அலுவலகத்தில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட மூன்று பேர் இரவு நேற்று முன்தினம் (28-07-2016) இரவு 9.45 மணிக்கு தொடர்புகொண்டு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்;டத்தைச் சேர்ந்த குறித்த ஊடகவியலாளரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் (29-07-2016) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.