அரசாங்கம் தேசியப் பாதுகாப்பை ஒதுக்கிவைக்கவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தற்போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஆனால் மறுசீரமைப்பு என்பது தேசியப் பாதுகாப்பை விட்டுக் கொடுத்து, இராணுவத்தின் செயற்பாடுகளில் தலையீடு செய்வது இல்லை.
அதேநேரம் மறுசீரமைப்பை ஏற்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் மேலும் பிரச்சினைகள் ஏற்பட நேரும் என்று சந்திக்கா கூறியுள்ளார்.