கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரின் இடத்துக்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.
கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமை வைத்திருப்பதால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.