அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனிருத்த பாதனிய அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கடனாளி என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை மீள அமர்த்தி அதனூடாக பாராளுமன்றத்தில் ஆசனமொன்றை கைப்பற்றிக்கொள்வதற்காகவே அரச வைத்திய அதிகாரிகளின் சைட்டத்துக்கு எதிரான தொழிற்சங்கப்போராட்டம் எனவும் புத்தளம் மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமல் செனவிரட்ண தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.