எதிர்வரும் மே மாதம் 15ஆம் நாள் பிரசல்சில் வெளியிடப்படும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் சிறிலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்கும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் பறிக்கப்பட்ட ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.
இந்தச் சலுகையை மீண்டும் பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் பல தடைகளை நீக்கியுள்ள நிலையில், இம்மாத நடுப்பகுதியில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.