தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலைசெய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில் அணையாது எரியும் பெரு நெருப்பு.உடல் தெறிக்க, சிதை எரிய சிங்கள இனவாத அரசின் கொடூர செயல்கள் அரங்கேறிய அந்தநாட்களின் வலிகள் தமிழர்களின் வாழ்வில் என்றும் எச்சமாய் தொடர்கிறது.
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு 10 .05 .2017 அன்று முதல் 18 .5 .2017 வரை யேர்மன் நாட்டின் மேற்பிராந்தியத்தில் இருந்து தலைநகர் வரை தமிழின அழிப்பு கண்காட்சியை மையப்படுத்தி விழிப்புணர்வு ஊர்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படஉள்ளது. இவ் விழிப்புணர்வு ஊர்தி சுற்றுப்பயணம் ஊடறுக்கும் முக்கிய நகரமத்தியில் தமிழின அழிப்பு கண்காட்சி வைக்கப்பட்டு அங்கு உள்ள நகரசபையுடன் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு அத்தோடு நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணிக்கு தமிழ் மக்களை அழைக்கும் முகமாக மக்கள் சந்திப்புகளும் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 10 . 05 . 2017 அன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு München நகரத்தில் Geschwister -Scholl – Platz முகவரியில் இருந்து விழிப்புணர்வு ஊர்தி சுற்றுப்பயணம் ஆரம்பிக்கப்படும்.அத்தோடு மாலை 17 மணிக்கு Arnulf Str 197 முகவரியில் தமிழ் மக்களுக்கான சந்திப்பும் நடைபெறும்.
இப் பயணத்தில் 9 நாட்கள் இணைந்து அரசியற்செயற்பாட்டில் ஈடுபட விரும்புவர்கள் கீழ் குறிப்பிட்ட அமைப்புகளுடன் தொடர்புகொள்ளவும்.
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி