தேர்தலில் மைத்திரி, மஹிந்த இணைந்து போட்டியிடும் – இசுர தேவப்பிரிய

256 0

எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் மைத்திரி தரப்பும், மஹிந்த தரப்பும் ஒன்றிணைந்தே போட்டியிடும் என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

மே தினக் கூட்டங்கள் மைத்திரி தரப்புக்கும், மஹிந்த தரப்புக்கும் உள்ள மக்கள் சக்தியை நிரூபித்துள்ளன.

இரண்டு கூட்டங்களுக்கும் அதிக மக்கள் வந்திருந்தனர். இருந்தும், கண்டியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்துக்கே அதிக மக்கள் வந்திருந்தனர்.

இருப்பினும், மஹிந்த அணியின் கூட்டத்திற்கு வந்த மக்களின் எண்ணிக்கையையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் தான்.

இரு தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற செய்தியையே இது சொல்கிறது. ஆனால், இப்போது சேர வேண்டிய தேவை இல்லை. தேர்தல் வரும் போது அதைச் செய்யலாம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்த்துவதற்கு மஹிந்தவும் விரும்பவில்லை. மைத்திரியும் விரும்பவில்லை.

இந்த வருடம் மூன்று மாகாண சபைகளுக்கும், உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் நடக்கும். செப்டெம்பர் மாதத்துக்குப் பின் மாகாண சபைத் தேர்தல் தாமதிக்கப்படாது.

உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் மைத்திரி – மஹிந்த தரப்புகள் ஒன்றிணைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே போட்டியிடும் என்று இசுறு தேவபிரிய தெரிவித்துள்ளார்